2011 ஆம் ஆண்டில் மெல்பேர்ணை சேர்ந்த யுவதியொருவர் சிற்றோடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில், 14 வருடங்களுக்கு பிறகு அவரின் மரணம் தொடர்பில் தற்போது மீள் விசாரணை முன்னெடுக்க பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்குரிய புதிய ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையிலேயே மீள் விசாரணை இடம்பெறவுள்ளது.
லூயிசா அயோனிடிஸ் 2011 ஒக்டோபர் 11 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார். அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார் என சந்தேகிக்கப்பட்டது. இதற்கு ஏற்ற வகையிலேயே 2014 இல் தீர்ப்பும் வழங்கப்பட்டது.
குறித்த பெண்ணுக்கும், அவரது துணைக்கும் இடையில் முரண்பாடு இருந்துள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன், நீதிமன்றத்துக்கு புதிய ஆதாராங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மீள் மரண விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.