சிட்னி தென்மேற்கு பகுதியில் பொலிஸார்மீது ஈட்டியை எறிந்து, பின்னர் வாளால் தாக்குதல் நடத்திய நபர்மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கிராஸ்மீரில் உள்ள வீடொன்றுக்கு சோதனை நடவடிக்கைக்காக பொலிஸார் நேற்று மாலை சென்றவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அங்கிருந்த 20 வயது இளைஞரிடம் ஈட்டி, கோடரி மற்றும் வாள் என்பன இருந்துள்ளன.
அவரை பொலிஸார் கைது செய்ய முற்பட்டபோது ஈட்டியை எறிந்துள்ளார்.
அத்துடன், 28 வயது பொலிஸ் அதிகாரி ஒருவரின் காலில் வாளால் குத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு எதிராக கொலை முயற்சி, கடமைக்கு இடையூறு உட்பட பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றார்.