விக்டோரியா, பல்லாரட்டின் மேற்கு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இரு சிறார்கள் உட்பட மூவர் பலியாகியுள்ளனர்.
லொறியும், காரும் மோதுண்டதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
காரில் இருந்த ஆணும், இரு சிறார்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். லொறி சாரதிக்கும் சிறு காயம் ஏற்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றனர்.