அடிலெய்டின் வடக்கு பகுதியில் இளைஞர் ஒருவரை மோதி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ள சாரதியை பொலிஸார் தேடி வருகின்றனர்.
நேற்றிரவு 8 மணியளவிலேயே 25 வயது இளைஞன்மீது கார் மோதியுள்ளது.
இதனையடுத்து வாகனத்தை நிறுத்தாது சாரதி தப்பியோடியுள்ளார்.
படுகாயம் அடைந்த இளைஞன், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
இந்நிலையிலேயே சம்பந்தப்பட்ட சாரதியை கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டை ஆரம்பமாகியுள்ளது.