விக்டோரியா மாநிலத்தில் வன்முறையில் ஈடுபடும் 14 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு எதிராக சட்டங்களை கடுமையாக்குவதற்கு விக்டோரிய மாநில அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதற்கமைய வயது வந்தவர்களுக்கு விதிக்கப்படும் சில தண்டனைகளை , சிறார்களுக்கும் விதிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
சிறார்கள் குற்றங்களில் ஈடுபட்டால் அவர்கள் சிறார் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்படும் நடைமுறையே அமுலில் இருந்தது. சிறார் நீதிமன்றங்கள் ஊடாக தற்போது சிறார்களுக்கு அதிகப்பட்டசமாக 3 ஆண்டுகளே சிறை தண்டனை விதிக்கப்படுகின்றது.
புதிய சட்டதிருத்தங்களின் பிரகாரம் வன்முறையில் ஈடுபடும் சிறார்கள் சிறை தண்டனையை எதிர்கொள்ளும் காலத்தை அதிகரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். ஆயுள் தண்டனை விதிப்பதற்குரிய ஏற்பாடும் முன்மொழியப்பட்டுள்ளது.
வீடுகளுக்குள் நுழைந்து வன்முறை, கத்திக்குத்து தாக்குதல்,கார் கடத்தில் மற்றும் மீண்டும், மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுதல் போன்ற குற்றங்களுக்காக வயது வந்தவர்களுக்குரிய தண்டனையை, சிறார்கள் எதிர்கொள்ள நேரிடும்.
புதிய சட்டத்துக்குரிய சட்டமூலம் வருட இறுதியில் முன்வைக்கப்பட், அடுத்த வருடம் ஆரம்பத்தில் சட்;டம் இயற்றப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா பொலிஸாரின் தரவுகளின் அடிப்படையில் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்படும் குற்றவாளிகளில் 12.8 வீதமானோர் சிறார்களாவர். கொள்ளை மற்றும் கார் கடத்தில் என்பவற்றிலேயே அதிகம் ஈடுபடுகின்றனர். எனினும், தற்போதைய சட்டத்தின் பிரகாரம் குற்றங்களில் ஈடுபடும் சிறார்களில் 75 சதவீதமானோர் சிறை தண்டனையில் இருந்து தப்பிவிடுகின்றனர்.
Aggravated home invasion
Home invasion
Intentionally causing injury in circumstances of gross violence (includes machete crime)
Recklessly causing injury in circumstances of gross violence (includes machete crime)
Aggravated carjacking
Carjacking
Aggravated burglary (serious and repeated)
Armed robbery (serious and repeated)