இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையில் வரலாற்று முக்கியத்துவமிக்க இரு தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்தோனேசிய ஜனாதிபதி Prabowo Subianto ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையிலேயே சிட்னியில் இன்று மேற்படி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் இது முக்கிய தருணம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார். அத்துடன், இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்புக்கும் இது வலுசேர்க்கும் எனவும் அவர் கூறினார்.
குறித்த ஒப்பந்தத்துக்குரிய ஏற்பாடுகள் மிகவும் இரகசியமாகவே இடம்பெற்றுவந்துள்ளது. ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் அதன் உள்ளடக்கங்கள் பற்றி தகவல்கள் கசியவில்லை.
பசுபிக் பிராந்திய நாடான பப்புவா நியூ கினியாவுடன் ஆஸ்திரேலியா பாதுகாப்பு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடப்பட்டது. அதன்பின்னர் இந்தோனேசியாவுடன் தற்போது முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.