ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் பாதுகாப்பு தொடர்பில் முத்தரப்பு தொடர்பு இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவுக்கான ஜப்பான் தூதுவர் அழைப்பு விடுத்துள்ளார்.
கன்பராவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய கடற்படைக்குரிய போர்க்கப்பல்களை உருவாக்குவதற்குரிய பொறுப்பு ஜப்பான் நிறுவனத்தொன்றிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவு மேம்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே முத்தரப்பு பாதுகாப்பு உறவை ஜப்பான் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.
இராணுவக கட்டமைப்பை சீனா வலுப்படுத்தி வருவது தொடர்பில் ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஏற்கனவே கழுகுப்பார்வை செலுத்தியுள்ளன. அத்துடன், தென்சீனக் கடல் மற்றும் தைவான் விவகாரத்தில் இவ்விரு நாடுகளும் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே உள்ளன.