2050 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வுக்கான அதன் உறுதிப்பாட்டை கைவிடுவதற்கு லிபரல் கட்சி ஒப்புக்கொண்டுள்ளது.
வியாழக்கிழமை நடைபெற்ற லிபரல் நிழல் அமைச்சர்களின் கூட்டத்தின்போதே, லேபர் கட்சியின் 2030 உமிழ்வு குறைப்புச் சட்டத்தை இரத்து செய்யவும் முடிவு செய்தது,
எனினும், பாரிஸ் ஒப்பந்தத்தில் நீடிக்கவும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளை நிர்ணயிக்கவும் தீர்மானித்தது.
நிகர பூஜ்ஜியத்திற்கு கட்சி தீவிரமாக பாடுபடாது என்றாலும், அதை அடைவது "வரவேற்கத்தக்க" விளைவாக இருக்கும் என லிபரல் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
" நாங்கள் பாரிஸ் ஒப்பந்தம் குறித்து உறுதியாக இருக்கிறோம், நீண்ட கால இலக்குகளை நிர்ணயிப்பது எங்கள் கொள்கை அல்ல, ஆனால் நிகர பூஜ்ஜியம் வரவேற்கத்தக்க விளைவாக இருக்கும்" என்று எதிர்க்கட்சித் தலைவர் சுசான் லே கூறினார்.
இவ்விகாரம் தொடர்பில் லிபரல் மற்றும் நெ~னல்ஸ் கட்சிகளுக்கிடையில் கருத்து மோதல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.