2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவு திட்டத்தின் 2ஆம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
வரவு செலவு திட்டத்துக்கு (2ஆம் வாசிப்பு) ஆதரவாக 160 வாக்குகளும் , எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் அநுரகுமார திஸாநாயக்கவால் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நவம்பர் 07 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
நவம்பர் 08 ஆம் திகதி முதல் இன்று (14) ஆம் திகதிவரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது. விவாதத்தின் பின்னர் மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது தேசிய மக்கள் சக்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி என்பன ஆதரவாக வாக்களித்தன.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி , தமிழ் தேசிய முன்னணி சர்வஜன அதிகாரம் என்பன எதிராக வாக்களித்தன.
அர்ச்சுனா எம்.பியும் எதிராக வாக்களித்தார்.
நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய தமிழ்க் கட்சியான தமிழரசுக் கட்சி நடுநிலை வகித்தது.
அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழநிலை விhதம் நாளை ஆரம்பமாகும். டிசம்பர் 05 ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.