நெஷனல்ஸ் கட்சியின் நியூ சவூத் வேல்ஸ் மாநில தலைவர் டுகால்ட் சாண்டர்ஸ் ( Dugald Saunders) தனது பதவியை இன்று இராஜினாமா செய்தார். அவரின் இந்த முடிவு கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டரை வருடங்கள் தலைமைப்பதவி வகித்த நிலையில், இராஜினாமா முடிவு கடினமானதொன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ சவாலான நிலையில் நாடாளுமன்றத்தில் எதிரணியை வழிநடத்த கிடைத்தது பெருமைக்குரிய விடயம்.
கட்சிக்காக மாநிலத்தில் செய்யக்கூடிய அனைத்தையும் மேற்கொள்வோம்.” எனவும் பதவி விலகிய தலைவர் குறிப்பிட்டார்.
அடுத்த தேர்தலுக்கு முன்னதாக புதிய தலைவர் ஒருவர் அவசியம். இதனை கருத்திற்கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டது.
அதேவேளை, நெஷனல்ஸ் கட்சி எம்.பிக்கள் நாளை சிட்னியில் ஒன்று கூடுகின்றனர். இதன்போது புதிய தலைமைத்துவம் பற்றி ஆராயப்படவுள்ளது.