நெஷனல்ஸ் கட்சியின் நியூ சவூத் வேல்ஸ் மாநில தலைவராக இந்திய பின்புலம்கொண்ட குர்மேஷ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
காப்ஸ் ஹார்பர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான இவர், வாக்கெடுப்பின்றி ஏகமனதாக தலைமைப்பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு முதல் மாநில நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டுவருகின்றார். நிழல் அமைச்சராகவும் பதவி வகிக்கின்றார்.
டாம்வொர்த் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கெவின் ஆண்டர்சன் துணைத் தலைவராக போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
நெஷனல்ஸ் கட்சியின் நியூ சவூத் வேல்ஸ் மாநில தலைவர் டுகால்ட் சாண்டர்ஸ் தனது பதவியை நேற்று இராஜினாமா செய்தார். அவரின் இந்த முடிவு கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அடுத்த தேர்தலுக்கு முன்னதாக புதிய தலைவர் ஒருவர் அவசியம். இதனை கருத்திற்கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டிருந்தார்.