விக்டோரியா மாநில எதிர்க்கட்சி தலைவராக ஜெஸ் வில்சனை, லிபரல் கட்சி எம்.பிக்கள் தெரிவு செய்துள்ளனர்.
இதற்கமைய அடுத்த மாநில தேர்தலில் பிராட் பேட்டினுக்கு பதிலாக ஜெஸ் வில்சனே லிபரல் கூட்டணியை வழிநடத்துவார். அவரே இனி விக்டோரியா மாநில லிபரல் கட்சி தலைவராகவும் செயற்படுவார்.
தலைமைத்துவ போட்டியில் பிராட் பேட்டின், முதன்முறையாக தெரிவுசெய்யப்பட்ட எம்.பியிடம் தோல்வி அடைந்திருப்பது அவருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகின்றது.
விக்டோரியா மாநிலத்தில் கூட்டணியை வழி நடத்தும் முதல் பெண் அரசியல்வாதி என்ற பெருமையை ஜெஸ் வில்சன் பெற்றுள்ளார்.
விக்டோரியாவில் லிபரல் கட்சி ஆட்சி மலர பாடுபடவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
புதிய தலைவருக்கு லிபரல் கட்சியின் தேசிய தலைவர் சூசன் லே வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.