பேர்த் விமான நிலையத்தில் பெடரல் பொலிஸ் அதிகாரியொருவர்மீது தாக்குதல் நடத்திய 34 வயது பெண்ணுக்கு ஈராண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் சிட்னியில் இருந்து ஜெட்ஸ்டார் நோக்கி விமானத்தில் பயணிப்பதற்கு குறித்த பெண் ஏறியுள்ளார். அவரை சீட் பெல்ட் அணியுமாறு அறிவுறுத்தப்பட்ட பின்னர் அவர் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. விசாரணைக்காக குறித்த பெண்ணை இறங்குமாறு பொலிஸார் கோரினர். இதனையடுத்து பொலிஸ் அதிகாரியொருவரை, அவர் பேனையால் குத்தி காயப்படுத்தினார். பொலிஸ் அதிகாரிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட பெண் காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையிலேயே இது தொடர்பான வழக்கில் பேர்த் நீதிமன்றத்தால் அவருக்கு எதிராக ஈராண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது