நவ நாஜிகளின் சித்தாந்தங்களை ஒடுக்குவதற்குரிய முயற்சியில் நியூ சவூத் வேல்ஸ் மாநில அரசாங்கம் இறங்கியுள்ளது.
இதற்கமைய இது தொடர்பில் காவல்துறை மற்றும் நீதி கட்டமைப்புக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்குரிய சட்டம் இயற்றப்படவுள்ளது.
இதற்குரிய சட்டமுன்மொழிவு நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆம் திகதி நியூ சவூத் வேல்ஸ் மாநில நாடாளுமன்றத்துக்கு வெளியே நவ நாஜிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நியாயாமான காரணங்கள் இன்றி பொது இடங்களில் நவ நாஜி சித்தாந்தத்துக்கு ஆதரவளிக்கும் நடத்தை தடைசெய்யப்படும் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நவ நாஜி சின்னங்களை காட்சிப்படுத்துவதற்கு
மாநிலத்தில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே சித்தாந்தம் மற்றும் கோசங்களை எழுப்புவதற்கும் தடை விதிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சட்ட ஏற்பாடுகளை மீறுபவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை அல்லது 11 ஆயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்படும்.