பிரான்ஸிடமிருந்து 100 ரபேல் போர் விமானங்களை கொள்வனவு செய்வதற்கு உக்ரைன் திட்டமிட்டுள்ளது என தெரியவருகின்றது.
இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் ஒப்பந்தத்தில் உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி மற்றும் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் ஆகிய இருவரும் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
மேற்படி ஒப்பந்தம்மூலம் தனது நாட்டின் வான்பாதுகாப்பை மேலும் பலப்படுத்த முடியும் என உக்ரைன் தூதரகம் தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் தற்போதும் நீடித்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் செயற்படுகின்றன. அந்நாடுகளின் ஆயுத விநியோகம் மற்றும் பொருளாதார உதவியால் உக்ரைன் தொடர்ந்து போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், அந்தப் பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை.
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா மேலும் தீவிரப்படுத்தியது. உக்ரைன் எல்லைக்குள் ரஷ்யா டிரோன், ஏவுகணைத் தாக்குதல்களில் ஈடுபட்டது.
இந்நிலையில், தற்போது உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷ்யா போர் தொடங்கிய பிறகு ஸெலன்ஸ்கி மேற்கொள்ளும் 9வது பிரான்ஸ் சுற்றுப்பயணம் இதுவாகும்.
இந்த சுற்றுப்பயணத்தின்போது ஸெலன்ஸ்கி பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனை சந்தித்துப் பேசினார்.
அவ்வேளை பிரான்ஸிடமிருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.