மெக்சிகோவில் இரு ஆஸ்திரேலிய சகோதரர்கள் உட்பட மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவுக்கு சுற்றுலா சென்றிருந்த ஜேக், கால்லம் ராபின்சன் மற்றும் அவர்களது அமெரிக்க நண்பர் கார்ட்டர் ரோட் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக ஹரி கிசேல் எனும் 23 வயது யுவதியொருவர் விளங்கினார்.
பேர்த்தைச் சேர்ந்த 31 வயது வைத்தியிரான ஜேக், லாக்ரோஸ் விளையாடுவதற்காக 12 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்த தனது சகோதரர் 32 வயது கல்லமைச் சந்திக்க கலிபோர்னியாவுக்கு சென்றார்.
அங்கிருந்து மெக்சிகோ சென்றனர். பின்னர் காணாமல் போனார்கள். 2024 ஏப்ரல் மாதத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணையிலேயே கொலை சம்பவத்தில் பிரதான சந்தேக நபரான பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.