ஆஸ்திரேலிய பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அச்சுறுத்தல் விடுத்த நவ–நாஜி உறுப்பினருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.
30 வயதான ஜோயல் டேவிஸ் என்பவர் , சிட்னி நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்டவேளையிலேயே பிணை மறுக்கப்பட்டுள்ளது.
Allegra Spender. என்ற நாடாளுமன்ற உறுப்பினருக்கே அநாகரீகமான முறையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பாலியல் பலாத்காரம் செய்வதற்குரிய அச்சுறுத்தலை சந்தேக நபர் விடுத்துள்ளார்.
சந்தேக நபர் எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.