ஆஸ்திரேலியா, கனடா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் புதிய முத்தரப்பு கூட்டாண்மைக்கு ஒப்புகொண்டுள்ளன.
தென்னாபிரிக்காவில் ஜி – 20 மாநாடு நடைபெற்றுவருகின்றது. இதில் ஆஸ்திரேலியா, கனடா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் பிரதமர்களும் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டுக்கு இணையாக இரு தரப்பு சந்திப்புகளும் இடம்பெற்றுவருகின்றன.
இந்நிலையிலேயே கனடா மற்றும் இந்திய பிரதமர்களுடன் தான் இருக்கும் படத்தை வெளியிட்டு ஆஸ்திரேலிய பிரதமர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.
தூய்மையான எரிசக்தி, கனிமங்கள் மற்றும் ஏஐ தொழில்நுட்பம் ஆகியவற்றை மையப்படுத்தியதாகவே புதிய கூட்டாண்மை அமையும் எனவும் அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
அதேவேளை, துருக்க ஜனாதிபதியையும் ஆஸ்திரேலிய பிரதமர் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.