இலங்கை அரசாங்கத்தின் பிரதான பங்காளிக்கட்சியான ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவின், லண்டன் விஜயத்துக்கு எதிரப்பு தெரிவித்து போராட்டம் வெடித்துள்ளது.
புலம்பெயர் இலங்கையர்களை சந்திப்பதற்காக ரில்வின் சில்வா லண்டன் சென்றிருந்தார்.
தேசிய மக்கள் சக்தியின் லண்டன் கிளையால் இக்கூட்டத்துக்குரிய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ரில்வின் சில்வா வந்த காரை இடைமறிந்த போராட்டக்காரர்கள், பல்வேறு கோசங்களை எழுப்பினர். புலிக்கொடிகளையும் ஏந்திருந்தனர்.
போராட்டகாரர்களுக்கு மத்தியில் அங்கிருந்து ரில்வின் சில்வா வெளியேறி, கூட்டம் நடத்தப்படும் இடத்துக்கு சென்றார்.
“ தோழரே இங்கு இப்படிதான் நடக்கும் அதனை கவனத்தில் கொள்ள வேண்டாம்.” எனக் கூறியே ரில்வின் சில்வா அழைத்துச்செல்லப்பட்டார்.