ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்ட 525 கிலோ கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்புடையவர்கள்மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலிய கடற்பரப்பில் வைத்தே கடந்த 6 ஆம் திகதி போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குரோசியா நாட்டை சேர்ந்த கப்பல் அதிகாரி மற்றும் சிட்னியை சேர்ந்த மூவர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.
போதைப்பொருள் வலையமைப்பின் பின்புலம் பற்றி ஆராயப்பட்டுவருகின்றது.