உக்ரைனுக்கான எந்தவொரு அமைதித் திட்டமும் புதிய பகுதியை ரஷ்யாவிடம் ஒப்படைப்பதாக அமையக்கூடாது என்று ஆஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.
உக்ரைன், ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள அமைதித் திட்டத்துக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையிலேயே ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் மேற்படி விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்பின் முன்மொழிவு குறித்து விவாதிக்க அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் உக்ரைன் உயர் அதிகாரிகள் ஜெனீவாவில் கூடியுள்ளனர்.
இதன்போது உக்ரைனின் இறையாண்மையை உறுதிப்படுத்தக்கூடிய வலுவான ஏற்பாடுகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே நான்கு ஆண்டுகாலம் நீடிக்கும் போரின் முடியாவது நீடித்த அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.