ஆஸ்திரேலியாவுக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய கன்பராவை சேர்ந்த 19 வயது இளைஞர், ஆயுள் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என தெரியவருகின்றது.
கனடா, வான்கூவரில் இருந்து சிட்னி வந்த விமானத்திலே யே இவர் 16 கிலோ ஐஸ் போதைப்பொருளை கடத்தி வந்துள்ளார்.
இவர் கொண்டுவந்த பையை எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டபோதே போதைப்பொருள் சிக்கியுள்ளது.
இவரின் மடிக்கணினியும் விசாரணைக்காக ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபருக்கு எதிராக இரு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு அதிக பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படக்கூடும். அவரை சிட்னி நீதிமன்றத்தில் இன்று முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.