“ ஈழத் தமிழர்களினது மட்டும் அல்ல, உலகத் தமிழர்களினதும் தலைவராக இருக்கக்கூடிய தலைவர் பிரபாகரன் அவர்களுடைய 71 ஆவது பிறந்தநாள் இன்றாகும்.” என்று இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ தேசியத் தலைவர் அவர்களுடைய போராட்டத்தை 2009 இற்கு முதலும் அதற்கு பிறகும் மோசமாக விமர்சித்து கேவலப்படுத்திய தரப்புகளில் ஜே.வி.பி. பிரதான இடத்தை வகிக்கின்றது.
மஹிந்த தரப்பு இனவாதம் பேசியபோது, விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு தத்துவ ஆசிரியர்களாக இருந்தவர்கள்தான் இந்த ஜே.வி.பியினர்.” எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.