இலங்கையில் நிலவிய சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 410 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 336 பேர் காணாமல்போயுள்ளனர்.
565 வீடுகள் முழமையாகவும், 20 ஆயிரத்து 271 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
நாடு முழுவதும் 4 லட்சத்து 7 ஆயிரத்து 594 குடும்பங்களைச் சேர்ந்த 14 லட்சத்து 66 ஆயிரத்து 615 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் 88 பேரும், பதுளை மாவட்டத்தில் 83 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 75 பேரும், மொனறாகலை மாவட்டத்தில் 52 பேரும் உயிரிழந்துள்ளனர்.
வெள்;ள அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளில் வெள்ள நீர் வழிந்தோடியுள்ளது. மீட்பு பணிகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.