நியூ சவூத் வேல்ஸ் பொலிஸ் அமைச்சரின் சாரதி, மதுபோதையில் வாகனம் செலுத்தினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
53 வயதான குறித்த நபர் பெம்போகா பகுதியில் ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியுள்ளார்.
இதனால் அரசாங்க ஊழியரான அவர், மூச்சு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதன்போது மது பயன்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சம்பவத்தின்போது அவர் அரச வாகனத்தையா பயன்படுத்தியுள்ளார் என எழுப்பட்;ட கேள்விக்கு மாநில பொலிஸ்துறை அமைச்சர் நேரடி பதிலை வழங்கவில்லை.
சந்தேக நபர் எதிர்வரும் 23ஆம் திகதி நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.