மெல்பேர்னிலுள்ள பாடசாலையொன்றில் அதிபர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய ஆசிரியர் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆரோன் சைக்ஸ் என்ற 43 வயது அதிபரே நேற்று மாலை கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கானார். அவரது கை மற்றும் முகம் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
37 வயதான தொழில்நுட்ப ஆசிரியர் ஒருவரே கத்திக்குத்து தாக்குதலை நடத்தியுள்ளார்.
இதனையடுத்து பாடசாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொலிஸார் குவிக்கப்பட்டு, பாடசாலை மூடப்பட்டது.
பின்னர் தாக்குதல் நடத்திய ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.அவர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அவருக்கு பிணை மறுக்கப்பட்டது. எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதி நீதிமன்றத்தில் அவர் முன்னிலையாகவேண்டும்.
மூடப்பட்ட பாடசாலை நாளை திறக்கப்படவுள்ளது.
பணிக்கான ஒப்பந்தம் தொடர்பிலேயே இம்மோதல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் விசாரணை தொடர்கின்றது.