மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பூர்வக்குடி மக்களுக்கு மத்தியில் ஆறு வெளிநாட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் சட்டவிரோதமாக கடல்வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்திருக்கலாம் எனவும், இவர்களுடன் மேலும் பலர் வந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
அடையாளம் காணப்பட்ட அறுவரும் கலம்பூர் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பெர்த்திற்கு வடக்கே சுமார் 3,000 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு ஆஸ்திரேலியாவின் வடக்கே முனையில் கலம்பூர் அமைந்துள்ளது.
இவர்களின் வருகை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.