ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையிலான போரில் உக்ரைன் பக்கம் நிற்கும் ஆஸ்திரேலியா, அந்நாட்டுக்கு மேலும் 95 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இராணுவ உதவிகளை அறிவித்துள்ளது.
அத்துடன், உக்ரைன்மீதான சட்டவிரோதப் போரை ரஷ்யா முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஆஸ்திரேலியா, ரஷ்ய கடற்படையினர்மீதான தடைகளையும் நீடித்துள்ளது.
உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்குவதில் நேட்டோ அமைப்பு தீவிரம் காட்டிவரும் நிலையில், ஆஸ்திரேலிய நிதியில் 50 மில்லியன் டொலர்கள் அதற்காக பயன்படுத்தப்படும்.
ஆஸ்திரேலியா நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்காவிட்டாலும் சர்வதேச பங்களாளர் என்ற அடிப்படையில் அவ்வமைப்புக்கு ஆதரவளிக்கின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.