லிபரல் கட்சியின் தெற்கு ஆஸ்திரேலிய தலைவர் வின்சென்ட் டார்சியா, தலைமைப் பதவியில் இருந்து விலகப்போவதாக இன்று அறிவித்துள்ளார்.
மாநிலத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் எஞ்சியுள்ள நிலையில் அவர் இவ்வாறு பதவி விலகியுள்ளார்.
தலைமைப் பதவியில் இருந்து விலகினாலும் மாநிலத் தேர்தலில் ஹார்ட்லி தொகுதியில் மீண்டும் களமிறங்குவார் என அறிவித்துள்ளார்.
மாநில தேர்தல் முடிவு தொடர்பில் உள்ளக கருத்து கணிப்பு வெளியாகி இருந்த நிலையிலேயே இந்த பதவி விலகல் இடம்பெற்றுள்ளது. புதிய தலைவராக நிழல் சுகாதார அமைச்சர் ஆஷ்டன் ஹர்ன் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.