நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடும் வெப்பம் நிலவுகின்றது. மாநிலம் முழுவதும் தீவிர வெப்ப அலை முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிட்னியில் 41 டிகிரி வெப்பம் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு கடும் வெப்பம் நிலவுவதால் காட்டுத் தீ அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் சில பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. வார இறுதிவரை வெப்ப காலநிலை நிலவும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.