மெல்பேர்னில் இளைஞர் ஒருவரின் உயிரை பலியெடுத்த விபத்தையடுத்து தப்பியோடிய 39 வயது சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மூரூல்பார்க்கில் நேற்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 28 வயது இளைஞன் உயிரிழந்தார்.
விபத்தையடுத்து தப்பியோடிய சாரதி கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டுவருகின்றார். அவரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.