ஆஸ்திரேலியா, நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் வெப்ப அலைக்கு மத்தியில் காட்டுத் தீயும் வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுமார் 30 வருடங்களாக அத்துறையில் சேவையாற்றிய 59 வயதான தீயணைப்பு வீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
நியூகேஸில் இருந்து சுமார் 90 கிமீ வடக்கே நெரோங் அருகே தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் மரம் முறிந்து விழுந்தே இம்மரணம் ஏற்பட்டுள்ளது.
நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு இம்முறையே தீயணைப்பு வீரர் ஒருவர், சேவையின்போது உயிரிழந்துள்ளார்.
சுமார் 3 ஆயிரத்து 500 ஹெக்டேயர்வரை காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.