செனட்டர் பவுலின் ஹான்சன் தலைமையிலான வன் நேஷன் கட்சியில் இணைந்து செயல்படபோவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜாய்ஸ் இன்று அறிவித்தார்.
நெஷனல் கட்சியில் இருந்து கடந்த மாதம் விலகிய ஜாய்ஸ்ஸின் அரசியல் நகர்வு பற்றி அவதானிக்கப்பட்டு வந்த நிலையிலேயே அவர் இன்று தனது அடுத்தக்கட்டம் பற்றி அறிவிப்பு விடுத்துள்ளார்.
தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜாய்ஸின் முடிவு ஏமாற்றமளிப்பதாக நெஷனல் கட்சித் தலைவர் டேவிட் லிட்டில் பிரவுட் தெரிவித்தார்.
மேலும் வன் நேஷனை "அரசாங்கக் கட்சி அல்ல, எதிர்ப்புக் கட்சி" எனவும் விமர்சித்தார்.
எனினும், கட்சி தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே தான் இந்த முடிவை எடுத்தார் என்று ஜாய்ஸ் கூறினார்.
2028 கூட்டாட்சி தேர்தலில் வன் நேஷன் கட்சி சார்பில் அவர் களமிறங்குவார்.