நாஜி சின்னங்களை காட்சிப்படுத்தியதாகவும், அவற்றை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வெறுக்கத்தக்க செயலில் ஈடுபட்டார் எனவும் குயின்ஸ்லாந்தில் வசிக்கும் பிரிட்டன் பிரஜை ஒருவர்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
43 வயதான குறித்த நபர் தொடர்பில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவந்தனர்.
இரண்டு வெவ்வேறு எக்ஸ் தள பக்கங்களை சின்னங்களைக் காட்சிப்படுத்தவும், நாஜி சார்பு சித்தாந்தத்தை ஊக்குவிக்கவும், யூத சமூகத்திற்கு எதிரான வன்முறையை ஆதரிக்கவும் அவர் பயன்படுத்தியதாக பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் நவம்பர் 5 ஆம் திகதிவரை பல பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளன.
இவரை கைது செய்து நடத்திய விசாரணையின் அடிப்படையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து உள்ளிட்ட மாநிலங்களை நாஜி சின்னங்களை காட்சிப்படுத்தல் சட்டவிரோத நடவடிக்கையாகும்.