பேர்த்திலுள்ள பாடசாலையொன்றில் 15 வயது மாணவன்மீது தாக்குதல் நடத்திய ஆறு சிறார்கள்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலைவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுவனை தாக்கிவிட்டு மேற்படி குழு அங்கிருந்து தப்பியோடியுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான சிறுவனின் கை மற்றும் தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், 13 முதல் 16 வயதுக்கிடைப்பட்ட அறுவரை கைது செய்தனர். தாக்குதல் மற்றும் காயப்படுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
இவர்களை சிறார் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.