ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கான ஏற்றுமதி அதிகரித்துவரும் நிலையில், சீனாவின் வர்த்தக உபரி 1 ரில்லியின் அமெரிக்க டொலர்களைத் ($US1 trillion) தாண்டியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வர்த்தக் போர் காரணமாக , வரிகளைத் தவிர்க்கும் நோக்கில் உற்பத்தியாளர்கள் அமெரிக்காதவிர ஏனைய சந்தைகளை இலக்கு வைத்து செயல்பட்டுவருகின்றனர்.
இந்நிலையிலேயே சீனாவின் ஏற்றுமதி வருமானம் எகிறியுள்ளது.
அத்துடன், ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கான ஏற்றுமதிகளும் அதிகரித்துள்ளன.
கடந்த நவம்பர் மாத தரவுகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகள் மூன்றில் ஒரு பங்கு குறைவடைந்துள்ளது என்பது தெரிகின்றது.
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள்மீது ட்ரம்ப்,வரிகளை அதிகரித்தார். இதனால் பல நாடுகளும் பாதிக்கப்பட்டன.
எனினும், ஐரோப்பா மற்றும் ஏனைய நாடுகளுக்கான தனது ஏற்றுமதியை அதிகரிக்கும் நடவடிக்கையில் சீனா இறங்கியமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுக்கான சீனாவின் ஏற்றுமதிகள் 29 சதவீதத்தால் குறைவடைந்திருந்தாலும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதிகள் 14.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கான ஏற்றுமதியும் 38 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.