யுவதியொருவரை கத்தியால் குத்தி கொலை செய்த முன்னாள் செவிலியர் ஒருவருக்கு 25 வருடகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ராஜ்விந்தர் சிங் என்ற 41 வயது நபருக்கே கெய்ர்ன்ஸ் உச்ச நீதிமன்றத்தால் இன்று மேற்படி தண்டனை வழங்கப்பட்டது.
2018 ஒக்டோபர் மாதம் குயின்ஸ்லாந்திலுள்ள கடற்கரை பகுதியில் வைத்தே 15 வயதான குறித்த யுவதி குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தையடுத்து இந்தியாவுக்கு தப்பியோடிய ராஜ்விந்தர் சிங்க, அங்கு சில வருடங்கள் தலைமறைவாக இருந்துள்ளார். 2022 ஆம் ஆண்டு டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்ட அவருக்கு எதிராக 2023 இல் கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணையிலேயே அவர் குற்றவாளியென்பது நிரூபிக்கப்பட்டு, 25 வருடகால சிறை தண்டனை விதிக்கப்பட்டது.