சிட்னி தென்மேற்கில் இன்று காலை இடம்பெற்ற கொடூரமான வீட்டு வன்முறைத் தாக்குதலில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இடுப்பு எலும்பு முறிவு மற்றும் காயத்தால் 36 வயதான அவரின் நிலைமை கவலைகிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பவ இடத்தில் அவருக்கு முதலுதவி வழங்கப்பட்ட பின்னர், விமானம் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
36 வயதான ஆண் தொலைக்காட்சியை உடைத்து, கண்ணாடியை எடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தலையில் தாக்கியுள்ளார். இவர் பெண்ணின் துணையென தெரியவருகின்றது.
அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெறுகின்றன.