டாஸ்மேனியாவின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால் குறைந்தது இரு கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு தீயணைப்பு படையினர் தொடர்ந்து போராடிவருகின்றனர்.
டயானாஸ் பேசின் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காலை 9.30 மணியளவில் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இது சிறிய நகரமான ஸ்டீக்லிட்ஸை நோக்கி பரவியது. இதனையடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பார்க்சைடு, பர்னெல்லா மற்றும் ஸ்டீக்லிட்ஸ் அருகே உள்ள டாஸ்மன் நெடுஞ்சாலை உட்பட சுற்றியுள்ள பகுதிகளில் அடர்ந்த புகை மற்றும் தீப்பொறிகள் காட்சியளிக்கின்றன. டாஸ்மேனியாவில் 11 மாவட்டங்களில் காட்டுத் தீ பரவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்திலும் காட்டுத் தீ பரவிவருகின்றது.
குயின்ஸ்லாந்து, மேற்கு ஆஸ்திரேலியா, தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் வடக்கு பிரதேசத்தில் வெப்ப அலை எச்சரிக்கைகள் தொடர்கின்றன.