ஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கான நேரடி விமான சேவையை முன்னெடுப்பதற்கு ஜெட்ஸ்டார் விமான சேவை நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய மெல்பேர்னில் இருந்து கொழும்புக்கான நேரடி விமான சேவை 2026 ஆகஸ்ட் 25 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாரத்திற்கு மூன்று முறை சேவையை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
மெல்பேர்ன் முதல் கொழும்பு வரையான நேரடி விமான சேவையை ஜெட்ஸ்டார் நிறுவனம் முன்னெடுப்பது, அந்நிறுவனத்தின் 22 ஆண்டுகால வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், விமான நிறுவனம் 26 புதிய வழித்தடங்களை அறிவித்துள்ளது. மேலும் 13 புதிய விமானங்களை வரவேற்றுள்ளது .இதன்மூலம் பயணிகள் குறைந்த விலையில் பயண ஏற்பாட்டை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன் முதல் கொழும்பு வரையிலான நேரடி விமான சேவை ஆஸ்திரேலியர்களுக்கு இலங்கைக்கு அதிக விமானப் பயணங்களை மேற்கொள்வதற்கான புதிய, நேரடி மற்றும் மலிவு விலை வழியை வழங்கும் என்று ஜெட்ஸ்டார் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.