கம்போடியாவுடனான எல்லை பதற்றங்களுக்கு மத்தியில் தாய்லாந்து நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான கோரிக்கையை மன்னரிடம், தாய்லாந்து பிரதமர் முன்வைத்துள்ளார் என தெரியவருகின்றது.
இக்கோரிக்கையை மன்னர் ஏற்கும்பட்சத்தில் முன்கூட்டியே அந்நாட்டில் பொதுத்தேர்தல் நடத்தப்படக்கூடும்.
அதாவது 46 முதல் 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கமைய மார்ச் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்படலாம் என தெரியவருகின்றது.
கம்போடியா மற்றும் தாய்லாந்துக்கிடையில் ஏற்பட்ட போர் அமெரிக்கா மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால் நிறுத்தப்பட்டது.
எனினும், அமைதி ஒப்பந்தத்தைமீறி இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது போர் மூண்டுள்ளது. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி போர் நிறுத்தத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.