சிட்னியில் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கர துப்பாக்கிச் சூட்டில்12 பேர் பலியாகியுள்ளனர். இது பயங்கரவாத தாக்குதலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயங்கர வன்முறை சம்பவம் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது. இது கோழைத்தனமான செயல் என்று நியூ சவூத் வேல்ஸ் பிரிமீயர் தெரிவித்தார்.
1996 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஆர்தர் படுகொலை சம்பவம் இடம்பெற்றது. அதன்பின்னர் இடம்பெற்ற பயங்கர தாக்குதல் சம்பவம் இதுவாகும்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் காவலில் உள்ளார். மேலும் ஒருவர் தொடர்பு பட்டுள்ளாரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை இடம்பெறுகின்றது.
இந்த தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர், யூத சமூகத்துடன் ஆஸ்திரேலியா துணை நிற்பதாக தெரிவித்தார்.