ஆஸ்திரேலிய யூத சமூகத்துடன் நாங்கள் உறுதியாக ஒன்றிணைந்து நிற்கிறோம் என்று வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
“ யூத மத பண்டிகையின் ஆரம்பமான ஹனுக்கா வின் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
தீவிரவாதம், யூத விரோதம், வன்முறை மற்றும் வெறுப்பு ஆகியவற்றுக்கு ஆஸ்திரேலியாவில் ஒருபோதும் இடமில்லை.
தங்களுடைய அன்பானவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றேன்.
காயமடைந்த அனைவரும் விரைவாக முழுமையாக குணமடைய வேண்டும் என நம்புகிறோம்.
ஆஸ்திரேலிய யூத சமூகத்துடன் நாங்கள் உறுதியாக ஒன்றிணைந்து நிற்கிறோம்.
இத்தகைய அச்சுறுத்தலுக்கு மத்தியில் தைரியத்தையும் மனிதநேயத்தையும் வெளிப்படுத்திய அவசர சேவை பணியாளர்களுக்கும் சாதாரண ஆஸ்திரேலிய மக்களுக்கும் எங்களது நன்றிகள்.” என்றுள்ளது.