ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி தொடர்பான சட்டங்களில் கடும் கட்டுப்பாடுகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் வாழும் யூத சமூகத்தை இலக்கு வைத்து சிட்னியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தையடுத்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதிய சட்ட முன்மொழிவின் அடிப்படையில் நபரொருவருக்கு வழங்கப்படும் துப்பாக்கி உரிமங்களின் எண்ணிக்கை தொடர்பிலும் வரையறைகள் செய்யப்படவுள்ளன.
சிட்னியில் துப்பாக்கிச்சுடு நடத்திய நபர்களில் ஒருவருக்கு ஆறு துப்பாக்கி உரிமங்கள் இருந்துள்ளன என்பது தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் தேசிய அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இதன்போது கடுமையான துப்பாக்கிச்சட்டத்துக்குரிய முன்மொழிவு முன்வைக்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.