யூத ஆஸ்திரேலியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பிரதமர் அந்தோனி அல்பானீஸி தவறிவிட்டார் என எதிர்க்கட்சி தலைவர் சூசன் லே குற்றஞ்சாட்டினார்.
மேற்படி சம்பவம் தொடர்பில் யூத சமூகமும் அல்பானீஸி அரசாங்கம்மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
யூத வழிபாட்டு தலங்கள்மீதான தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் இடம்பெற்ற பின்னர் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி இருக்க வேண்டும் எனவும்எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, ஆஸ்திரேலியாவில் வாழும் முஸ்லிம் சமூகம், மேற்படி தாக்குல் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ளது.