சிட்னி போண்டியில் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட நபருக்கு எதிராக கொலைக் குற்றம் உட்பட 59 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தந்தை (சாஜித் அக்ரம் - 50) மற்றும் மகன் (நவீத் அக்ரம் - 24) ஆகியோரே இந்த கொடூர தாக்குதலை நடத்தி இருந்தனர். சம்பவ இடத்திலேயே தந்தை கொல்லப்பட்டார்.
மகன் காயமடைந்த நிலையில் பொலிஸ் காவலின்கீழ் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.
இந்நிலையில் அவர் கோமாவில் இருந்து மீண்டதும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
15 கொலைக்குற்றச்சாட்டுகள், பயங்கரவாத செயல் உட்பட 59 குற்றச்சாட்டுகள் அவர் தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வைத்தியசாலையில் இருந்து ஒன்லைன்மூலம் அவர் நீதிமன்றத்தில் காட்சிப்படுத்தப்பட்டார்.
சிறைச்சாலைக்கு மாற்றும் அளவுக்கு அவர் பூரண குணமடையவில்லை என்பதால் பொலிஸ் காவலின்கீழ் தொடர்ந்து சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
போண்டி பயங்கரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 42 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்தவர்களில் சிலரின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றன. பெருந்திரளானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர் .