யூத எதிர்ப்புக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் ஆஸ்திரேலியா முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொண்டுவருகின்றது.
தேசிய அமைச்சரவைக் கூட்டதுக்கு பின்னரே அதிரடி நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.
இதற்கமைய வன்முறையை ஊக்குவிக்கும் வகையில் போதனை செய்யும் போதகர்கள், வெறுப்பு பேச்சு சட்டத்தின்கீழ் குறிவைக்கப்பட்டுள்ளனர்.
வெறுப்பை தூண்டும், பிரிவினையை ஆதரிக்கும் போதகவர்களின் விசாக்களை இரத்து செய்யும் அதிகாரம் உள்துறை அமைச்சுக்கு வழங்கப்படவுள்ளது.
“ ஆஸ்திரேலியாவில் யூத எதிர்ப்புக்கு இடமில்லை, அது நம் நாட்டின் கட்டமைப்பைக் கிழிக்கும் ஒரு தீமை" என்று பிரதமர் அல்பானீஸி இன்று அறிவித்தார்.
யூத எதிர்ப்பு தூதுவருடன் இணைந்தே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
யூத எதிர்ப்புக்கு எதிராக தனது அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது என்பதை பிரதமர் அறிவித்திருந்தார். அதேபோல மேலும் செயல்பட்டிருக்கக்கூடும் என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.