நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறு ஆஸ்திரேலிய எதிர்க்கட்சி தலைவர் சூசன் லே வலியுறுத்தியுள்ளார்.
யூத எதிர்ப்பு போக்கை ஒழிக்கவும், பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை வலுப்படுவது பற்றி விவாதிக்கவே கிரிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக சபையை கூட்டுமாறு வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், யூத எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆதரிக்கும் கலைஞர்களுக்கான கிரியேட்டிவ் ஆஸ்திரேலியா நிதி ஒப்பந்தங்களை நிறுத்த வேண்டும் என்பது உட்பட கூட்டணியின் முன்மொழிவுகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
யூத வரலாறு, அடையாளம் மற்றும் கலாச்சாரம் தொடர்பான கல்வி பாடத்திட்டங்களை மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
புதிய மின்னணு கண்காணிப்பு சட்டம் அவசியம். பயங்கரவாத உறைவிடத்திலிருந்து வரும் எந்தவொரு நபருக்கும் விசா வழங்கப்படக்கூடாது.
பயங்கரவாத எதிர்ப்பு காவல் பணிக்கு அதிக நிதி வழங்கப்பட வேண்டும். “ எனவும் சூசன் லே வலியுறுத்தியுள்ளார்.