போண்டி பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ரோயல் ஆணைக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை தொடர்பில் நியூ சவூத் வேல்ஸ் மாநில பிரீமியர் கிறிஸ் மின்ஸ் சாதக சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளார்.
சம்பவம் எவ்வாறு நடந்தது, அதன் பின்புலம் என்னவென்பதை கண்டறிய ரோயல் ஆணைக்குழு அவசியம் என தான் நம்புகின்றார் என பிரீமியர் குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பில் நியூ சவூத் வேல்ஸ் மாநில அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கப்படும் என பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார்.
போண்டி தாக்குதலையடுத்து பாதுகாப்பு குழு ஏழு தடவைகள் கூடியது எனவும், இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.