போண்டி பயங்கரவாதத் தாக்குதலின்போது துப்பாக்கிதாரியிடமிருந்து துப்பாக்கியை பிடுங்கிய – நபருக்காக திரட்டப்பட்ட நன்கொடை அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் கதாநாயகனாக தற்போது கருதப்படும் அவரின் சிகிச்சைக்கு 2.5. மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்கள் நன்கொடமையாகக் கிடைக்கப்பெற்றுள்ளன.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவருக்கு உலகளவில் 43 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நிதி பங்களிப்பு செய்துள்ளனர்.
போண்டி கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யூதர்கள் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 15 பேர் பலியாகினர்.
தூக்குதல் நடத்திய சாஜித் அக்ரம் (50), நவீத் அக்ரம் (24) ஆகிய இருவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மீது பாய்ந்து துப்பாக்கியை பிடுங்கிய அல் அகமதுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சம்பவத்தில் அவரும் காயமடைந்தார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அல் அகமதுவை ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸி, எதிர்க்கட்சி தலைவர் உட்பட பலரும் வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டனர்.
இந்நிலையிலேயே துணிச்சலாக செயல்பட்ட பல உயிர்களைக் காப்பாற்றிய கதாநாயகன் அல் அகமதுவின் சிகிச்சைக்காக பல்வேறு தன்னார்வ அமைப்புகள் வசூலித்த நன்கொடை கையளிக்கப்பட்டுள்ளது.